இன்று மீண்டும் சட்டசபை கூட்டம்; புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
சென்னை: இரண்டு நாள் விடுமுறைக்கு பின், இன்று சட்டசபை மீண்டும் கூடும் நிலையில், புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ச்சி
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், கவர்னர் உரையுடன் சட்ட சபையில் முதல் கூட்டம், கடந்த 18ம் தேதி தொடங்கியது. தி.மு.க., ஆட்சியில் கவர்னர் ரவியை போன்று அரசிற்கு குடைச்சல் தராமல், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தன் உரையை நிகழ்த்தி சென்றார். இது, எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை, முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை. விடுமுறை முடிந்து சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் இன்று தொடர்கிறது.
எதிர்பார்ப்பு
முதல்வர் விஜயின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டாஸ்மாக் கலாச்சாரத்தை ஒழித்து, இளைஞர்களுக்கான புதிய தொழிற்சாலைகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதுதான் இந்த மாநிலத்தின் மிக முக்கியத் தேவை. அதைத்தான் மக்கள் சார்பாக நாமும் எதிர்பார்க்கிறோம்.
இவ்ளோ BUILDUP வேண்டாம். எல்லாம் யாதவ் கையில்தான் இருக்கு
எதிர்கட்சிகள் சரி. ஆளும் கட்சி முதல்வர் எப்போது சட்ட சபையில் ஆக்கபூர்வமாக பேசி, பதிலளிக்கப் போகிறார்? கொஞ்ச நாள் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைவு என்ற விபத்தினால் திடீர் முதல்வரான இவரை விட வயதில் மிக மூத்தவரான ஜானகி அம்மையார் கூட நன்றாகவே பேசினார்.
"இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் கூடும் இன்றைய கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநடப்பு நாடகங்கள் மற்றும் வீண் அரசியல் கூச்சல் குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீரமைப்பது குறித்தும், சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் சபையில் பொறுப்புடன் விவாதிக்க முன்வர வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகு"
உங்களுக்கு என்ன முக்கியம்??? ஒன்னும் இல்லை வேலை வாய்ப்பு இல்லை புதிய தொழிற்சாலை இல்லை வேணுமணா TASMAC கொட்டலாம். வாட்டசாப்பில் லாட்டரி தொழிற் நடத்தலாம்
"முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் இன்றைய தினத்தில் மீண்டும் கூடும் சட்டமன்றத்தில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்க்கிறது. கடந்த வார மேகதாது அணை எதிர்ப்புத் தீர்மானம் போல, இன்றும் மக்கள் நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான சட்டமன்ற விவாதங்கள் தொடர வாழ்த்துகள்"
"கடந்த காலங்களைப் போல ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே வீண் மோதல்கள் இல்லாமல், புதிய த.வெ.க ஆட்சியில் ஆளுநர் உரை சுமுகமாக நிகழ்ந்ததே ஒரு நல்ல நிர்வாக விடியலுக்கு அக்மார்க் சான்று எதிர்க்கட்சிகளின் வீண் அரசியல் எதிர்பார்ப்புகளை உடைத்து, அரசு நிர்வாகம் நேர்மையான பாதையில் நகர்வதை இது காட்டுகிறது. இன்று தொடங்கும் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும் விரிவாக விவாதிக்க வேண்டும்"
அறிவிப்பு என்றால் சலுகை,இலவசமா? இதே வேலையாக சுத்தறாங்க . எங்க வீட்டில் வேலையை செய்பவர் சொல்கிறார்கள்." இந்த மாதம் 1000 ரூபாய் தான் குடுத்தாங்க. அரசிடம் பணமில்லை என்றால் என்ன அது தான் விஜய்யிடம் கோடிகோடியாக பணம் உள்ளதே அதை தரலாம் இல்லையா " என்று. நம் மக்களுக்கு இலவச சுவை அளவுக்கு அதிகமாக உள்ளது
சரியாக சொன்னீர்கள் , அரசு முறையான நிர்வாகம் செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் இலவசம் என்பது மக்களை சோம்பேறி வாழ்க்கையில் தள்ளிவிடும். இலவசங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
உழைப்பின் மகிமை, அதனால் ஏற்படும் பலன்களை அறியா வண்ணம் மக்களை ஏமாற்றிய திருட்டு திராவிடம்மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'