திறந்தவெளியில் கழிவுநீர்

1. திறந்தவெளியில் கழிவுநீர் போத்தனுார், சீனிவாச நகர், ராஜராஜேஸ்வரி நகர் 2ம் வீதியில், வீடு ஒன்றிலிருந்து திறந்தவெளியில் சாக்கடை நீர் வெளியேற்றப்படுகிறது. சலையில் வழிந்தோடுவதால் வீதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

- தங்கவேல்: 2. மின்இணைப்பில்லை மாநகராட்சி, 100வது டிவிசன், கார்மல் நகர், கிறிஸ்துவ உண்டு, உறைவிட பள்ளி அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை.

- சேயோன்: 3. வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து கணபதி, வி.ஜி.ராவ் நகர் பிரதான சாலையில் குழாய் உடைந்து பல வாரங்களாக குடிநீர் கசிகிறது. இதனால், அந்த இடத்தில் சாலை உள்ளே இறங்கி பள்ளம் ஏற்பட்டு, வாகனஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது.

- ரகுநாதன்: 4. சாக்கடை அடைப்பு தாகூர் நகர் விரிவாக்கம், 57வது வார்டு, இரண்டாவது வீதி, ஐந்தாவது வார்டு சாக்கடை சுத்தம் செய்யாமல் அடைத்துநிற்கிறது. கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது.

- சவுண்டப்பன்: 5. வீணாகும் குடிநீர் ரேஸ்கோர்ஸ், சிசு வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- மங்கை: 6. நிரம்பிவழியும் குப்பை வடவள்ளி, சிவசக்தி காலனியில், சமுதாய கூடத்திற்கு அருகில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பை முழுமையாக அகற்றப்படுவதில்லை. குப்பையால் காட்டுப்பன்றிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.

- சேகர்: 7. சேதமடைந்த கம்பம் திருச்சி ரோடு, சென்ட்ரல் ஸ்டூடியோ, தனலட்சுமிபுரம், கதிரவன் கார்டன் பகுதியில் உள்ள மின்கம்ப எண் ஏழு, மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரெட்டில் பெரிய விரிசல்கள் காணப்படுவதால் உடனடியாக மாற்ற வேண்டும்.

- ராஜி: 8. விரிவாக்குவதே தீர்வு சரவணம்பட்டி, 11வது வார்டில், சின்னவேடம்பட்டி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. பள்ளி வாகனங்கள் ஒன்றுகொன்று எதிர்திசையில் வரும்போது கடந்து செல்ல சிரமமாக உள்ளது.

- சரஸ்வதி: 9. கரையில் குவியும் குப்பை கோவை மாநகராட்சி, 62வது வார்டு, நஞ்சுண்டாபுரம் - வெள்ளலுார் செல்லும் மண் சாலையில் நொய்யல் ஆற்று கரையில் குப்பை அதிகளவு கொட்டப்படுகிறது. மினி குப்பைக்கிடங்காக மாறிவருகிறது.

- ஞானமூர்த்தி: 10. தினமும் விபத்துதான் நரசிம்மநாயக்கன்பாளையம், பாலவிநாயகர் நகர், நான்காவது வார்டு சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது. தினமும் ஒன்றிரண்டு விபத்துகள் ஏற்படுகிறது.

- நந்தினி: 11. தெருவிளக்கு பழுது வடவள்ளி, அஜ்ஜனுார் ரோட்டில் உள்ள கம்பத்தில் கடந்த எட்டு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை.மேலும், கம்பத்தை சுற்றிலும் புதர், கொடிகள் அடர்த்தியாக வளர்த்துள்ளது.

- சுரேஷ்: சாக்கடை வசதியில்லை கோவை மாநகராட்சி, கார்த்திக் நகர், 28வது வார்டில் முறையான சாக்கடை வசதியில்லை. திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

- பிரான்சிஸ்:

Advertisement