பள்ளி அருகே மதுபானக்கடை
மதுரை: மதுரை வண்டியூர் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைகளால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு சமீபத்தில் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள்ள 717 மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி பல கடைகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். ஆனாலும் பலஇடங்களில் பள்ளிகள் அருகே கடைகள் உள்ளன.
மதுரை வண்டியூர் மெயின்ரோட்டில் உள்ள இரு கடைகள் பள்ளியின் அருகே உள்ளதென பொதுமக்கள் கூறுகின்றனர். பள்ளியில் இருந்து 300 மீட்டருக்குள் இருப்பதாகவும், அதன் வழியாக மாணவிகள் நடந்தும், வாகனத்திலும் வருவதற்கு அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து தெரிவித்தும் பலனில்லாததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement