கார் டயர் பஞ்சராகி விபத்து பேசின்பாலத்தில் வாகன நெரிசல்
வியாசர்பாடி: கார் டயர் பஞ்சராகி இரும்பு தடுப்பில் மோதியதால், பேசின்பாலம் அருகே, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஏக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், 40. காரில் வியாசர்பாடியில் இருந்து மின்ட் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.
வழியில், பேசின்பாலம் அருகே டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார், இரும்பு தடுப்பில் மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை.




புளியந்தோப்பு போலீசார், மீட்பு வாகனம் மூலம் காரை அகற்றினர். இதனால், வியாசர்பாடி பாலம் முதல் பேசின்பாலம் வரை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நிலவியது; வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement