1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப கேட்டு முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

பனமரத்துப்பட்டி; சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்-பட்டி ஏரி, 2,137 ஏக்கர் கொண்டது. அதன் அருகே அத்திப்பட்டி, சூரியூர் கிராமங்களில் விவசா-யிகள் பயிர் சாகுபடி செய்தனர். 2005ல், ஏரி ஆக்கி-ரமிப்பு காலி செய்யப்பட்டது. அப்போது அத்திப்-பட்டி, சூரியூர் பகுதிகளில் இருந்த, விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். இதற்கு பின், அத்திப்-பட்டி, சூரியூர் நிலத்தை திரும்ப கேட்டு, 20 ஆண்டாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்-களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் அத்திப்பட்டி, சூரியூர் விவசா-யிகள், 'சேலம் மாநகராட்சி நிர்வாகம் எங்களிடம் இருந்து பறித்த, 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு, விரைவு தபால் மூலம் தனித்தனியே கோரிக்கை மனு அனுப்பி வருகின்-றனர். இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் மனு அனுப்பி உள்ளனர்.

Advertisement