தவறான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு? சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை
கெங்கவல்லி; திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, அயப்பாக்கத்தை சேர்ந்த, சின்னதுரை மனைவி சூர்யா, 35. இவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஆணையாம்பட்-டியில் உள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்க-ளுடன், கெங்கவல்லி சார் - பதிவாளர் அலுவல-கத்தை, நேற்று முற்றுகையிட்டார்.
தொடர்ந்து சார் - பதிவாளர் அனிதாவேணியிடம், புகார் மனு அளித்தார்.அதில், 'ஆணையம்பட்டி புதுாரை சேர்ந்த நபர், கடந்த ஏப்., 30ல், அவரது மனைவி பெயரில் ஆவணம் தயாரித்து, கெங்கவல்லி சார் - பதி-வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். எனக்கு பாத்தியப்பட்ட இடத்தை, தவறான ஆவ-ணத்துடன் பதிவு செய்துள்ளார்.
அந்த நபருக்கு தட பாத்தியம் உள்ளதற்கு மூல ஆவணம் இல்லை. தவறான ஆவணம் பதிவு செய்ததால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
அதற்கு சார் - பதிவாளர், 'இன்று(நேற்று) தான், இப்பணியிடத்துக்கு வந்துள்ளேன். அந்த பதிவு குறித்து விசாரிக்க அதிகாரம் இல்லை. மாவட்ட பதிவாளரை அணுகி தீர்வு காணுங்கள்' என்றார். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்