குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ஈரோடு:குழந்தை
தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
கையெழுத்து இயக்க பதாகையில் அனைத்து துறையினர்,
மக்கள் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு வாசகம் அடங்கிய வில்லைகள், வாகனங்களில் ஒட்டினர்.* அரச்சலுார் டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி
மொழி, கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஏற்றனர்.
*
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., உதவியாளர் அமுதா
தலைமையில் அனைத்து அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் தின எதிர்ப்பு
உறுதிமொழி ஏற்றனர்.
* ஈரோடு, சம்பத் நகர் ஒருங்கிணைந்த
நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி
சமீனா தலைமையில், '14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒரு போதும்
எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். அவர்கள் பள்ளிக்கு செல்வதை
ஊக்குவிப்போம். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற
சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்' என உறுதிமொழி
ஏற்றனர்.
* ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அர்பித் ஜெயின் தலைமையில், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.