ஊரை விட்டு ஒதுக்கி திருவிழா ஏற்பாடு கலெக்டரிடம் குன்னம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: ஊரை விட்டு ஒதுக்கி வைத்து திருவிழா ஏற்பாடு செய்வதால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைத்து வேறு கிராமத்திற்கு செல்ல உள்ளதாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

வானுார் அடுத்த குன்னம் ஊராட்சி துணைத்தலைவர் சந்தானம் தலைமையில் கொடுத்துள்ள மனு:

எங்கள் கிராமத்தில் திருவிழா நடத்தும்போது, அம்மன் நகர், பள்ளிக்கூட தெருவிற்கு சுவாமி வீதியுலா செல்வதைத் தடுக்கும் நபர்கள் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தோம்.

நாங்கள் புகார் தெரிவித்தும் சட்டத்தை மீறி திருவிழா ஏற்பாடு செய்கின்றனர்.

எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து திருவிழா ஏற்பாடு செய்வதால் வரும் 15ம் தேதி 2 தெருக்களைச் சேர்ந்த 350 பேர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை வானுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வேறு ஏதேனும் ஊருக்கு குடியேற உள்ளோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement