த.வெ.க.,வுக்கு தாவிய அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ.,க்களுக்கு 'நோட்டீஸ்'
சென்னை: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரியபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பழனிசாமி சார்பாக சபாநாயகர் பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, த.வெ.க., அரசிற்கு ஆதரவளித்த 25 பேரில், ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.,வில் இணைந்தனர்.
மீதமுள்ள 21 பேர், மீண்டும் பழனிசாமி பக்கம் சென்றனர். அவர்களை மன்னிப்பதாக பழனிசாமி அளித்த கடிதத்தை சபாநாயகர் ஏற்றார். அதே நேரத்தில், த.வெ.க., அரசிற்கு ஓட்டளித்து, பதவியை ராஜினாமா செய்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப் பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க., அளித்த புகார் குறித்து, ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி, நான்கு பேருக்கும் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீசில், அவர்கள் நால்வரும் வரும் 15ம் தேதிக்குள் விளக்கம் தருமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்