கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் விஜய் 1.6 கிலோ வெள்ளி வாள் வழங்கி தரிசனம்
உடுப்பி: தமிழக முதல்வர் விஜய் நேற்று உடுப்பி கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்து, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
டில்லி சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று மதியம் 1:00 மணிக்கு கர்நாடக மாநிலம், மங்களூரு வந்தார்.
அவரை, கர்நாடக அரசு சார்பில் சுகாதார துறை அமைச்சர் காதர் வரவேற்றார். பின் அங்கிருந்து, 120 கி.மீ., துாரம் காரில் பயணித்து, உடுப்பி மாவட்டம், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு பிற்பகல் 3:00 மணிக்கு வந்தார்.
சிவப்பு நிற சால்வை
விஜய் வருகையை ஒட்டி, கோவிலிலும், கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இக்கோவிலில் ஆண் பக்தர்கள் சட்டை அணியக்கூடாது. எனவே, விஜய் சட்டையை கழற்றிவிட்டு, சிவப்பு நிற சால்வை அணிந்தபடி கோவிலுக்கு சென்றார்.
அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின், உள்ளே சென்ற விஜய், மூகாம்பிகையை பயபக்தியுடன் தரிசித்தார். தான் ஏற்கனவே வேண்டியிருந்தபடி, 1.6 கிலோ எடை உள்ள வெள்ளி வாளை காணிக்கையாக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பிற்பகல் 3:00 முதல் 3:30 மணி வரை கோவிலில் இருந்த விஜய், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இந்த கோவிலுக்கு வழங்கிய தங்க வாள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
சிறப்பு யாகம்
பின், வெளியே வந்த அவர், காத்திருந்த மக்களை பார்த்து கையசைத்து விட்டு, மங்களூரு சென்றார். அங்கிருந்து, சென்னைக்கு விமானத்தில் சென்றார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், கொல்லுாருக்கு வந்து மூகாம்பிகையை தரிசனம் செய்தார். அப்போது, 1.5 கிலோ எடை உள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கினார்.
அதுபோல, மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, 2004ல் இக்கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
@block_B@ கருப்பு கொடி காட்ட முயற்சி; 20 பேர் கைது
மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 'கர்நாடக ரக் ஷண வேதிகே' அமைப்பின் சார்பில், 'முதல்வர் விஜய்க்கு கறுப்பு கொடி காட்டப்படும்' என அறிவித்திருந்தனர். இதனால், உடுப்பி மாவட்டம் முழுதும் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விஜய் பயணித்த பாதையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், 'கர்நாடக ரக் ஷண வேதிகே' அமைப்பின் சார்பில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் உடுப்பி, உத்யாவரில் கருப்புக் கொடியுடன் திரண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, அழைத்து சென்றனர். அப்போது அவர்கள், 'காவிரி நமதே' என்று கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.block_B
வாழ்க வளமுடன்,..மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு