‘பாஸ்ட் புட்’ கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி, டி.வி.நகர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈசாக், 52; புஸ்சி வீதியில் மாலை நேர பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு போதையில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். அதற்கு, கடையில் கூட்டம் அதிகமாக உள்ளதால், சிறிது நேரம் காத்திருக்குமாறு ஈசாக் தெரிவித்தார். 

இதனால், கோபமடைந்த 3 பேரும், ஈசாக்கை திட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கினர். தலையில் காயமடைந்த ஈசாக் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றார்.

அவர் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement