6 காங்., நிர்வாகிகள் மீது நடவடிக்கை: மாநில தலைவர் வைத்திலிங்கம் அதிரடி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்ட காரைக்கால் காங்., பொது செயலாளர் கோபால்சாமி, செயலாளர் கண்ணன், புதுச்சேரி காங்., கமிட்டி செயலாளர் ஜெயசூலன், உறுப்பினர் கதர் மைதீன், இளைஞர் காங்., மாநில துணைத் தலைவர் சமீர் அமீது ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் கட்சியின் கட்டுபாடு, வீதிமுறைகளை மீறி செயல்ப்பட்ட புதுச்சேரி காங்., மாநில பொது செயலாளர் பழனி, அவரது பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.