போதை மாத்திரை பதுக்கியவர் கைது

ஈரோடு; ஈரோடு சூளை பகுதியில் வலி நிவாரணி மாத்-திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனையில், ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி கலைச்செல்வனிடம், 22, இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 3,000 போதை மாத்-திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஈரோடு வைராபா-ளையம் வாட்டர் ஆபீஸ் சாலை நாட்ராயன் கோவில் பகுதி பொம்மன் மகன் யுவராஜை, 26, நேற்று கைது செய்தனர்.

Advertisement