காவலாளியின் மொபைல் திருடியவர் கைது
குமரன் நகர்: கட்டுமான பணியிடத்தில் அத்துமீறி நுழைந்து, காவலாளியின் மொபைல் போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரவாயலைச் சேர்ந்த சரவணன், 51. மேஸ்திரி. இவர், அசோக் நகர் 12வது அவென்யூவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கு காவலாளியாக இருந்த அர்ஜுன், நேற்று முன்தினம் அதிகாலை சத்தம் கேட்டு எழுந்தபோது, மர்ம நபர் ஒருவர் கட்டடத்திற்குள் நுழைந்து திருட முயன்றது தெரியவந்தது.
காவலாளி வருவதை கண்டு, சுவர் மீது வைத்திருந்த காவலாளியின் மொபைல் போனை, மர்ம நபர் திருடி தப்பினார். இது குறித்து, குமரன் நகர் போலீசில் சரவணன் அளித்த புகாரை அடுத்து, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தியாகு, 41, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு
Advertisement
Advertisement