கைதிகளுடன் பணப்பரிவர்த்தனை: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணிமங்கலம்:குற்றவாளிகளிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற புகாரையடுத்து, மணிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள், தலைமை காவலர் கோபி, 48. முதல் நிலை காவலர் மகேஷ், 45. இருவரும், குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதுடன், போலீஸ் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, முன்கூட்டியே தெரிவித்ததாக புகார் எழுந்தது.

மேலும், அவர்கள் பணம் பெறும் வீடியோ, காவல் ஆணையர் சஞ்சய் குமாரின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement