மாநில யோகாசன போட்டி சென்னை வீரர்கள் அசத்தல்

சென்னை: உடலை வில்லாக வளைத்தும், தலைகீழாக நின்றும், கடினமான ஆசனங்களை எளிதாக செய்து காட்டியும் 250க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமியர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள விநாயக மிஷன் ஆராய்ச்சி பவுண்டேசன் நிகர்நிலை பல்கலை சார்பில், மாநில யோகாசனப் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் நடந்தது. 250க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றனர்.

இதில், 6 முதல் 18 வயது வரையிலான வீரர்கள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் முன்னோக்கிய வளைவு, பின்னோக்கிய வளைவு, முதுகுத்தண்டு முறுக்கு, கை சமநிலை, கால் சமநிலை ஆகிய ஐந்து பிரிவுகளில் இருந்து, தலா ஐந்து ஆசனங்களை செய்து தங்கள் திறமையை நிரூபித்தனர்.

முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு நினைவுப் பரிசு, பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

மாணவியர் பிரிவில், சென்னை மகரிஷி பதஞ்சலி யோகா பள்ளியின் வெண்ணிலா, ‘--சாம்பியன் ஆப் சாம்பியன்’ பட்டத்தை வென்றார்.

அடுத்த இடமான ‘சாம்பியன்’ பட்டத்தை, சென்னை எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி ஜோஸ்னிகா -கைப்பற்றினார்.

மாணவர்கள் பிரிவில், சென்னை மகரிஷி பதஞ்சலி யோகா பள்ளி நவநேத கணபதி, சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதே பள்ளியின் தருண் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Advertisement