ரயிலில் அடிபட்டு ஊழியர் உயிரிழப்பு

எண்ணுார்: ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, எண்ணுார் – கத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண், ரயிலில் அட்பட்டு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதில், எண்ணுாரைச் சேர்ந்த மகிமைதாஸ், 58, என்பதும், ரயில்வேயில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அட்பட்டு இறந்திருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement