உளுந்தையில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் வீண் :2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத அவலம்
உளுந்தை: உளுந்தை ஊராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், இரு ஆண்டுகளாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் வீணாகி வருகின்றன.
மத்திய அரசால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் விதமாக, 'பி.எம்., ஜன்மான்' எனும் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதில், கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி பகுதியில், கடந்த 2023 - 24ம் ஆண்டு, பி.எம்., ஜன்மான் திட்டத்தின் கீழ், தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 தொகுப்பு வீடுகள், 65.91 லட்சம் ரூபாயில் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதில், 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மூன்று வீடுகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன.
கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்கி இரு ஆண்டுகளாகியும், திறப்பு விழா நடத்தி, பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் வீணாகி வருகின்றன.
மேலும், இப்பகுதியில் மக்கள் சென்று வரும் வகையில், கடந்த 2024 - 25ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 3.42 லட்சத்தில் சிமென்ட் கல்லால் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இன்று வரை, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, சம்பந்த்தப்பட்ட ஓன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால், கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர், முறையாக பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தான், பணிகள் நிறைவடைந்த வீடுகளையும் ஒப்படைக்கவில்லை எனவும், அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உளுந்தை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்