போலி கையெழுத்து வழக்கு: சி.ஐ.டி., முன் அபிஷேக் ஆஜர்
கொல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பாக திரிணமுல் காங்., -- எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகளை போலியாக போட்ட விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியிடம், சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., சட்டோபாத்யாவை நியமித்து, 70 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் வழங்கப்பட்டது. ஆதரவு கடிதத்தில் சில எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்த சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள், திரிணமுல் காங்., - எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர். அவரது பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி., தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.
அதன்படி, சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக அபிஷேக் நேற்று மீண்டும் ஆஜரானார். அதே போல், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., குணால் கோஷ் ஆஜராகவும் சி.ஐ.டி., அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்