சக்தி கல்லுாரியில் யோகா தினம்
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். சக்தி கல்வி குழும தாளாளர் வேம்பணன் முன்னிலை வகித்தார்.
யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன அமைதி, மன ஒருமைப்பாடு, நேர்மறை சிந்தனையை வளர்க்கும். அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, புத்துணர்ச்சி ஊட்டும் நாளை யோகாவால் உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவிகள் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சிகளை செய்து காட்டினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதபிரியா, உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
Advertisement
Advertisement