முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தேனி:-தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் த.வெ.க.,வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தினர். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தேனி, போடி, பெரியகுளம் ஒன்றியம், நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வேட்டி, சேலை வழங்குதல், ரத்ததானம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் மாவட்ட இணை செயலாளர் விக்னேஷ், செயற்குழு உறுப்பினர் சந்தோஷ், பொருளாளர் சீராளன், வர்த்தக அணி நிர்வாகி நவீன், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்னப்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சிவநாதன், பிரபாகரன், சபரி, இணைச்செயலாளர்கள் சக்தி, மன்னன், பொருளாளர் முருகன், குபேந்திரன், ஊமைத்துரை, தினேஷ், செல்லப்பாண்டி, லட்சுமணன், முருகேஷ், வீரமணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனியில் நடந்த நிகழ்விற்கு தெய்வா ஓட்டல் நிர்வாகி பால்பாண்டி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வைகை அணை அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக டிபன்பாக்ஸ், வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. பெரியகுளம் செங்குளத்துப்பட்டியில் அசைவ உணவு வழங்கும் விழாவை மாவட்ட செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்தார். ஆர்.கே., குழும நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன், போர்ட்டோ நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

Advertisement