அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து 50,000 மூட்டை நெல் வீண்; விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து, 50,000க்கும் மேற்பட்ட மூட்டை நெல் வீணாகியுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.
மூடப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சம்பா பருவத்தில், 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை விட அதிகமாக, 6.22 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 23 கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டன.
தற்போது, மாவட்டத்தில், 3.50 லட்சம் டன் நெல் இருப்பு உள்ளது. இந்நிலையில், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தனியாருக்கு சொந்தமான 15 ஏக்கரில், நுகர்பொருள் வாணிப கழகத்தால், 3 கோடி கிலோ நெல் சேமிப்பு திறன் உடைய திறந்தவெளி நிலையம், கடந்த பிப்., 2ம் தேதி திறக்கப்பட்டது.
தற்போது, 2.50 கோடி கிலோ இருப்பு உள்ளது. இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் உள்ள நெல்லை மூடி பாதுகாக்க, போதிய தார்ப்பாய்கள் இல்லை. சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை.
இதனால், வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து, நெல் கருகி வீணாகியது. தற்போது, பெய்த மழையில் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு, வாணிப கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது: நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும், அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது. ஆரம்ப காலத்தில் இருந்தே பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், நெல் மூட்டையை தார்ப்பாய் தட் டுபாடு காரணமாக மூடாமல் விட்டுள்ளனர். அதன் விளைவாக, பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் பதில் என்ன? நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாக பிரித்து, சீரமைத்து வருகிறோம். 630 மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன. மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடந்து வருகிறது' என்றனர்.
@block_P@
நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாக பிரித்து, சீரமைத்து வருகிறோம். 630 மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன. மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடந்து வருகிறது' என்றனர்.block_P
@block_G@
வேளாண் துறை அமைச்சர் வினோத், தன் சொந்த தொகுதியில் வீணான நெல் மூட்டையை சென்று பார்க்காமல், முதல்வர் பிறந்த நாள், பஸ் இயக்கம் போன்ற விழாக்களில் பங்கேற்றதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.block_G
தருமபுரம் ஆதினம் குடோன் கட்ட இடமளித்துள்ளார். அரசு உடனே பெரிய கார்ப்ரேட்களை அனுகி குடோன் கட்டிதர சொல்லி கேட்கலாம்.
முதலமைச்சருக்கு இந்த விவசாயிகளின் பிரச்சினையைக் கேட்க நேரமில்லை, ஆனால் தினமும் நடிகைகளைச் சந்திக்க அவருக்குப் போதுமான நேரம் இருக்கிறது. அவரது குழுவினர் விளம்பரத்திற்காக ரீல்களில் மட்டுமே வேலை செய்வார்கள்.
திறமையற்ற நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசு உண்மையிலேயே மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. தமிழக மக்கள் விரைவில் இதை உணர்ந்து வருந்துவார்கள் என்று நம்புகிறேன்.
முதல்வர் அவர்கள் நெல் மணிகள் வீணாக மழையில் நனையாமல் பாதுகாக்கபடுவது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், நெல் மணிகள் மழையில் நனைவது அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் செவ்வனே நடந்தது.
தவெக ஆட்சியிலும் இது தொடர்வது சோகம்.
ஆகவே இனி ஒருமுறை கூட நெல்மணிகள் நனைவது அறவே கூடாது. முதல்வர் இது குறித்து நீண்ட கால பலனை தரும் வகையில் விரைந்து செயலாற்ற வேண்டும்
ஆட்சி மாறியது. காட்சியும் மாறியது என்றும் நிலையை விஜய் ஏற்படுத்த வேண்டும்.
விவசாயிகள் மழையிலும் வெயிலிலும் நனைந்து இந்த விவசாயம் செய்கிறார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் AC-யில் உட்கார்ந்து சாப்பிடுவதால் விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை, இந்த முட்டாள்களுக்கு விவசாயிகள் அள்ளும் பகலும் அயராது உழைத்து. ரொம்ப கஷ்டப்பட்டு, வெயிலில் மழையில் நனைந்து, இந்த விவசாயம் செய்து, இந்த நெல் அறுவடை செய்து, தமிழக அரசுக்கு கொடுக்கிறார்கள். அதற்கு பாதுகாப்பு இல்லை. துப்பு இல்லாத அரசு, அரசு அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..
கலயாணத்தில் அரைகிலோ அரிசி அட்சதை போடறதை குறை சொன்னவர் இப்போ எங்கு இருக்கிறார்
இது இப்போ ஒரு பையனும் அரசை பத்தி குறை சொல்ல மாட்டிங்குது
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஈவு இரக்கம் பார்க்காமல் உடனடியாக சஸ்பெண்ட்செய்து 20 வருடங்கள் கடுக்காவல் சிறையில் அடைக்க வேண்டும்.
இந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யவேண்டும்.
மகளிர் உரிமை தொகை, கல்விக் கடன்கள் ரத்து, தங்க நகை கடன்கள் ரத்து மாணவர்களுக்கு புதியதாக ஊக்க தொகை மாதாமாதம். ஆயிரங்களில் , மகளிற்கு தமிழகம் முழுவதும் அரசு வாகனங்களில் பயணம் இலவசம் போன்றவைகளால் பல்லாயிரம் கோடி செலவு. இவை முறையாக, விவசாயிகளின் உற்பத்தி நெல் , விளை பொருட்கள் கொள்முதல், பாதுகாத்தல் , விவசாயிக்கு தேவையான நீர்வழி பாதுகாப்பு, குளங்கள் பராமரிப்பு போன்ற நீண்ட கால திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் சாலை பராமரிப்பு சரியில்லை, குண்டும் குழியுமாக நாளும் சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. அடிப்படையான இவை நன்கு செய்யப்பட வேண்டும்.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்