தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம், ஜூன் 22-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து வரும் கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் தலைமை வகித்தார். தென்மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் மருதுஆனந்த் முன்னிலை வகித்தனர். அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார்.
ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் பாம்பன்பாலன் சுவாமிகள், தொண்டரணி அமைப்பாளர் அண்ணாத்துரை, சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் திருமுருகதினேஷ், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் திருமாறன், முருகபக்தர்கள், ஹிந்து அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
தீபம் ஏற்றும் பிரச்னையில் பொறுப்பற்ற முறையில் பேசிய த.வெ.க., அமைச்சர் நிர்மல் குமார், பள்ளி மாணவர்கள் திருநீறு, குங்குமம், ருத்ராட்சம், கைகளில் கயிறு கட்டுவதற்கு தடை விதித்த கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரைக் கண்டித்தும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள், பி எம் ஸ்ரீ கல்விக்கூடங்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'