அவசர உதவி அழைப்பு பெட்டி , மின் விளக்குகள் பழுது: வாகன ஓட்டிகள் ,பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
பாகூர்: விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவசர உதவி அழைப்பு பெட்டிகள் மற்றும் கழிவரைகள் பராமறிப்பு இருப்பதால், அவசர காலங்களில், சாலை பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில், 194 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 5 ஆண்டிற்கு முன் துவங்கியது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கும் இச்சாலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், நாகை மாவட்டங்களின் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த சாலையில், மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில், வாகன ஓட்டிகளின் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் இடைவெளியில், சாலையின் இருபுறமும் ஆரஞ்சு நிறத்திலான அவசர உதவி அழைப்பு பெட்டி (எஸ்.ஓ.எஸ். பாக்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர உதவி அழைப்பு பெட்டி, விபத்து, வாகனம் பழுது, அல்லது அவசர மருத்துவத் தேவை போன்ற ஆபத்தான நேரங்களில், அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவிக்க உதவுகிறது.
சோலார் பவர் மூலமாக இயங்கும் இந்த அவசர உதவி அழைப்பு பெட்டியில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக அந்தப் பகுதியைப் பராமரிக்கும் சுங்கச்சாடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உதவி கோரலாம்.கட்டுப்பாட்டு அறையில், அந்த உதவி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை ஜி.பி.எஸ்., மூலமாக துள்ளியமாக அறிந்து கொண்டு, ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதன் மூலமாக உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, மொபைல் போன் இல்லாத அல்லது சார்ஜ் இல்லாத நெருக்கடியான நேரங்களில், இந்த அவசர உதவி அழைப்பு பெட்டிகள், சாலையை பயன்படுத்துவோருக்கு உதவியாக இருக்கும். ஆனால், இந்த புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசர உதவி அழைப்பு பெட்டிகள், பல இடங்களில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சோலார் பவர் பேனல் இன்றியும் உள்ளதால், அதன் செயல் திறன் கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக, பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சந்திப்பில் உள்ள அவசர உதவி பெட்டிக்கான கேபிள் துண்டாகியும், சோலார் பேனால் இன்றியும் இருப்பதை காண முடிகிறது. உதவி கோருவது குறித்து தகவல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில், அவசர உதவி தேவைப்படுவோர், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இச்சாலையில் பஸ் நிறுத்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் பராமறிப்பின்றி உள்ளதாலும், பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடப்பதாலும், சாலை பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?