மாவட்டத்தில் 8 மையங்களில் ‘நீட்’ மறு தேர்வு 3,596 பேர் பங்கேற்பு: 1,153 பேர் ‘ஆப்சென்ட்’
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த ‘நீட்’ மறு தேர்வை 3,596 பேர் எழுதினர்.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை மூலம் ‘நீட்’ மறு தேர்வு நேற்று நடந்தது.
மாவட்டத்தில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 720 பேர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 720, நெய்வேலி வட்டம் 11, என்.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 720, என்.எல்.சி கேந்திர வித்யாலயா பள்ளியில் 597, வட்டம் 10, என்.எல்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480, பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600, வடலுார் அரசு கலைக் கல்லுாரியில் 480, காடாம்புலியூர் ஆர்.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் 432 பேர் என மொத்தம் 8 மையங்களில் 4,749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு மையத்தில் காலை 10:00 மணி முதல் மாணவ, மாணவிகள் குவியத் துவங்கினர். 11:00 மணி முதல் 1:30 மணி வரை மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்குள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் சில மாணவிகள் அணிந்து வந்த மூக்குத்தி, கம்மலை பெற்றோர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கழற்ற உதவி செய்தனர்.
தேர்வு 2:00 மணிக்கு துவங்கி மாலை 5:15 மணி வரை நடந்தது. தேர்வை 3,596 பேர் எழுதினர். 1,153 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'