மாணிக்கவாசகர் குருபூஜை திருவாசகம் முற்றோதல்
திருப்பூர், ஜூன் 22–
மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் ஒரே நேரத்தில் திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் நிர்வாகி பத்மா சிவலிங்கத்தின் முயற்சியால், திருப்பூரிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை திருவாசகம் முற்றோதல் பாராயணத்தில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக, மாணிக்கவாசகருக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
–––
மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், உலக சாதனை திருவாசகம் முற்றோதல் பாராயணம் நடந்தது.
மேலும்
-
வீட்டை விலைக்கு வாங்குவதில் பிரச்னை 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி