வீட்டை விலைக்கு வாங்குவதில் பிரச்னை 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி
நாமக்கல்; வீட்டை விலைக்கு வாங்கும் பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தி-யடைந்த பெண், இரண்டு மகள்களுடன் மண்-ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
நாமக்கல் அடுத்த லத்துவாடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், லாரி டிரைவர். இவரது மனைவி இந்-திராகாந்தி. தம்பதியருக்கு, இரண்டு மகள்கள். இவர்கள், செல் வம் என்பவரின் வீட்டில் வாட-கைக்கு குடியிருந்து வருகின்றனர். குடியிருந்து வரும் வீட்டை, 30 லட்சம் ரூபாய்க்கு வாங்க முன் தொகையாக, 1.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்-ளனர்.இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் செல்வம், புரோக்கர் மூலம் அதிக விலைக்கு விற்க முன்-பணம் பெற்றுள்ளார். இதையறிந்த இந்திராகாந்தி, வீட்டின் உரிமையாளரிடம் சென்று கேட்டபோது, வீட்டை காலி செய்ய சொல்லியதுடன், பெற்ற பணத்தை தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது
குறித்து, மோகனுார் போலீஸ் ஸ்டேஷனில் இந்-திராகாந்தி புகாரளித்துள்ளார். ஆனால், எந்த நட-வடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து, இந்-திராணி, தன் இரண்டு மகள்களுடன், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அப்போது, மூன்று பேரும் தலையில் மண்-ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்-றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை