மேற்கு மாம்பலத்தில் ஆக்கிரமிப்புகளால் 40 அடி சாலை 10 அடியாக குறுகி பாதிப்பு
மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரியகவுடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், 40 அடி அகலமிருந்த சாலை 10 அடியாக குறுகியுள்ளது. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரியகவுடா சாலை 1.3 கி.மீ., நீளமும், 40 அடி அகலமும் உடையது. மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இதில், லேக் வியூ சாலையில் தொடங்கி சக்ரபாணி தெரு வரை உள்ள பகுதி 134வது வார்டுக்கு உட்பட்டது. சக்ரபாணி தெருவில் இருந்து கண்ணதாசன் தெரு வரையிலான 60 மீட்டர் நீள சாலை, 131, 132 மற்றும் 134வது வார்டுகளின் எல்லைப் பகுதியாக உள்ளது.
இந்த பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் குடிசைகளாக இருந்த இவ்வீடுகள், தற்போது நிரந்தர கட்டடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், 40 அடி அகலமிருந்த சாலை 10 அடியாக சுருங்கியுள்ளது.
ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு சாலை குறுகியுள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது; வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால், வாகன ஓட்டிகள் இடையே வீண் தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி எந்த வார்டுக்கு உட்பட்டது என்பது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் தெளிவான முடிவு எடுக்காததால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருதி, ஆரியகவுடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதன் முழு அகலத்துடன் சாலையை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
எவனாவது திருட்டு தி மு க காரந்தான் ஆக்ரமித்திருப்பான். அல்லது அ தி மு க காரனாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கண்ணியமும் கட்டுப்பாடும் இல்லாத பரதேசிகள்தான் இவர்கள்
" அற நிலையத் துறைக்குச் சொந்தமான " என்று தலைப்பு போட்டிருப்பதை உடனேயே மாற்றிவிட வேண்டுகிறேன் .
இதை ஒரு 50 வருடங்களாக நானும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் செய்தி கொடுத்ததற்கு நன்றிமேலும்
-
வீட்டை விலைக்கு வாங்குவதில் பிரச்னை 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி