மனைவியுடன் தகராறு மகன் மாயம்: தாய் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூரில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, மாயமான மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என, காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் வீரநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 42. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி சரண்யா, 36.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிய இவர்களுக்கு, குழந்தைகள் இல்லை. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ம் தேதி திருப்பதிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற கார்த்திக், அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, கார்த்திக்கின் தாய் முத்தம்மாள், நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement