திருமலை கோவிலில் செப்., மாத சேவைக்கு முன்பதிவு தொடக்கம்

சென்னை: திருப்பதி, திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் செப்., மாத சேவைகளுக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கப்பிரதக்‌ஷணம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் முன்பதிவு மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது.

வரும் செப்., மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு நாளை காலை 10:00 மணிக்கு தொடங்குகிறது. மாலை 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

அடுத்தமாதம் திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம், 200 ரூபாய்க்கான முன்பதிவு, வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு தொங்குகிறது என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

***

Advertisement