செழித்து வளரும் அரச செடிகளால் நடவாவி கிணறு வலுவிழக்கும் அபாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் நடவாவி கிணற்றின் தளத்தில் செழித்து வளர்ந்துள்ள அரச செடிகளை வேருடன் அகற்றாததால் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் கிராமத்தில், சஞ்சீவிராய சுவாமி கோவில் உள்ளது. இதன் கோவில் குளத்தின் அருகில் நடவாவி கிணறு உள்ளது.
பூமிக்கடியில் அழகிய மண்டபத்தின் நடுவில் கிணறு அமைந்துள்ளது. மண்டபம் முழுதும் கிணற்று தண்ணீர் நிறைந்திருக்கும். மண்டபம் உள்ளே செல்வதற்கு கருங்கற்களால் ஆன படிகள் கட்டப்பட்டுள்ளன. கிணற்றில் மேல்பகுதியில் இருந்து பார்த்தால் தண்ணீர் மட்டுமே தெரியும்.
ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்டு மண்டபம் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த நடவாவி கிணற்றின் தளத்தில் அரச செடிகள் செழித்து வளர்கின்றன. இதனால், கிணறு வலுவிழந்து நாளடைவில் இடிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, நடவாவி கிணற்றில் தளத்தில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்