துாத்துக்குடி யில் திடீர் சூறைக் காற்று: 100 வீடுகள் சேதம் அரிதான நிகழ்வு என வானிலை மையம் விளக்கம்
துாத்துக்குடி: துாத்துக்குடியில், திடீரென வீசிய சூறைக்காற்றில் 100க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. 'இது தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் அரிதான சூறாவளி' என, வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
துாத்துக்குடி அருகே, வாகைகுளம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 4:40 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. தரையில் இருந்து வேகமாக சுழன்றடித்தபடி வான் நோக்கி ஒரு சுழல் போல அந்த நிகழ்வு காட்சியளித்தது.
அதிர்ச்சி சூறைக்காற்று காரணமாக, துாத்துக்குடி --- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாகைகுளம் சுங்கச்சாவடியில் கூரைகள் பறந்தன. சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால், அங்கு பணியில் இருந்த நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்.
சுங்கச்சா வடி அருகே அமைந்துள்ள 'பி டவுன்' என்ற தனியார் 'தீம் பார்க்' கில் இருந்த பொருட்களும் , சூறாவளிக்கு முற்றிலும் சேதமடைந்தன. அங்கு குளித்துக் கொண்டிருந்த இருவர் காயமடைந்தனர்.
சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது சுங்கச்சாவடி கூரை விழுந்ததால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல, விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவை சூறைக்காற்றில் கவிழ்ந்தன. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கன்டெய்னர் வீடு, காற்றில் அடித்து செல்லப்பட்டது.
விமான நிலையத்தை ஒட்டிய முடிவைத்தானேந்தல் கிராமத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளின் கூரைகள் காற்றால் சேதமடைந்தன.
மேலும், 10க்கும் மேற்பட்ட மி ன்கம்பங்கள் சரிந்து விழுந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
சிகிச்சை முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தாசில்தார் திருமணி ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 63 வீடுகளின் கூரைகள் முற்றிலுமாக சேதமடைந்தது தெரியவந்தது.
பாதிக் க ப்பட்ட மக்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சேத கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடித்து, அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டு ம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ வைரல் வானத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய இந்த அதிசய நிகழ்வை, சிலர் தங்கள் மொபைல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதற்கிடையே, வானிலை ஆய்வு மையம் இந்த திடீர் சூறாவளி உருவானது குறித்து அளித்த விளக்கம்:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில், கிழக்கு மேற்காக, கடல்மட்டத்தில் இருந்து, 3.1 கி.மீ., உயரத்தில், வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த பகுதி நிலவியது. இதில், மேல்நோக்கிய காற்றோட்டத்தால், மழை மேகங்கள் உருவாகின.
இதன் வி ளைவாக, துாத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த காற்று, துாசி எழுச்சி மற்றும் தீவிர மேல்நோக்கிய கா ற்றோட்டம் ஏற்பட்டது. இதனால், புழுதி கலந்த மேல்நோக்கிய காற்று சுழற்சி, துாண் போன்று ஏற் பட்டது.
காற் றழுத்த வேறுபாடு, கீழ்மட்ட காற்று திசை மற்றும் வேகமாற்றம் காரணமாக, புழுதி சூறாவளி ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில், துாத்துக்குடியில், 'டோர்னாடோ' போன்ற புழுதி சூறாவளி அரிதாக ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
@block_P@
நிலத்தியல் துறை உதவி பேராசிரியர் செல்வம் கூறியதாவது:
துாத்துக்குடி சூறாவளி போன்ற வளிமண்டல நிகழ்வு, தென் இந்தியாவில் அரிதாக காணப்படும் ஒரு முக்கியமான வானிலை சம்பவமாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை, இந்நிகழ்வுடன் இணைத்து பார்க்க வேண்டும். உலகளவில் வெப்பமயமாதல் காரணமாக நிலமும், கடலும் அதிக வெப்பமடைந்துள்ளன. இதனால், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை உயர்ந்து, அதிக ஈரப்பதம் கொண்ட காற்று வளிமண்டலத்தில் சேர்கிறது.
அதிகரித்து வரும் வெப்பநிலை, கடல் வெப்ப உயர்வு மற்றும் மழை முறைமைகளின் மாற்றம் ஆகியவை தொடர்ந்தால், தமிழகத்தில் இத்தகைய அரிதான வானிலை நிகழ்வுகள் அதிகமாக காணப்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நிகழ்வுகளை கண்காணித்து, அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வது மிகவும் அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.block_P
மேலும்
-
இனி டிவியில் இன்ஸ்டா ரீல்ஸ்; புதிய வசதி அறிமுகம்
-
கனவு நிறைவேறியது; சாதனை வீரர் சூர்யவன்ஷி பெருமிதம்
-
ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படும் செங்கற்கள்
-
திருப்புவனம் ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் நிறுத்தம்
-
வெறும் பஞ்ச் டயலாக்; உதயநிதி விமர்சனம்
-
நாளை மறுநாள் மின் துறை வெள்ளை அறிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு