ரேஷனில் தே.எண்ணெய் வழங்கக்கோரி போராட்டம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னை விவசாயிகள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் செல்வம் தலைமையில், நேற்று போராட்டம் நடந்தது.

இதில், உரித்த தேங்காய் கிலோ, 60 ரூபாய், உரிக்காத தேங்காய் கிலோ, 30 ரூபாய், கொப்பரை கிலோ, 180 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை, அரசு உயர்த்தி வழங்க வேண்டும். அரசே நேரடியாக, தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும், தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய, அரசு நடக்க எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, முழக்கமிட்டனர்.

Advertisement