மாணவர்களின்றி 7.. ஒரே மாணவருடன் 4; மூடும் நிலையில் தேனி அரசு பள்ளிகள்
தேனி: தேனி மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ், எட்டு வட்டாரங்களில், 325 அரசு பள்ளிகள், 131 உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இதில், பல பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. 65 பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளது.
சுருளியூர், நீரார்பட்டி, பழனிதேவன்பட்டி, பொம்மராஜபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேனி மகாராஜா தொடக்கப்பள்ளி, கோடங்கிபட்டி சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி என, ஏழு பள்ளிகளில் மாணவர்களே இல்லாத நிலை உள்ளது. இப்பள்ளிகளில் தலா ஓர் ஆசிரியர் என பணியில் உள்ளனர். சுக்காங்கல்பட்டி, கோகிலாபுரம் கள்ளர் பள்ளிகள், வெள்ளிமலை மரகதம் தொடக்கப்பள்ளி, போடி கணேஷ் தொடக்கப்பள்ளியில் தலா ஒரு மாணவர் என படிக்கின்றனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், 'தேனி மகாராஜா பள்ளி நிர்வாக குளறுபடியால் கடந்தாண்டு மூடப்பட்டது. 'சுரு ளியூர் பகுதியில் தொடக்கப்பள்ளி செல்லும் வயதில் மாணவர்கள் இல்லாததால், இரு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. நீரார்பட்டி, பழனிதேவன்பட்டியில் ஒரு மாணவர் மட்டும் உள்ளதால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர்.
'பெற்றோரிடம் பேசி பள்ளிகளை நடத்த முயன்று வருகிறோம். சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாதது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்' என்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா