மனைவியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை; கணவர், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு
திருச்சி: மனைவியை அடித்து நிர்வாணப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர், அவரது கள்ளக்காதலி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரபு, 44. இவரது மனைவி நித்யா, 39. இவர்களுக்கு திருமணமாகி, 11 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தொழிலதிபரான பிரபு, தொட்டியத்தில் வணிக வளாகம் வைத்துள்ளார். இதில் பணியாற்றும், காயத்ரி, 34, என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை நித்யா கண்டித்துள்ளார்.
கணவன் - மனைவி இடையே தகராறு இருந்துள்ளது. கடந்த, 17ம் தேதி இரவு, வழக்கம் போல் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்து உதைத்த பிரபு, அவரது உடைகளை கிழித்தெறிந்து நிர்வாணப்படுத்தி உள்ளார். இதனால் அவமானமடைந்த நித்யா, வீட்டின் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு, மொபைல்போன் மூலம் போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார், அவருக்கு அணிய துணி கொடுத்து, அறையை விட்டு வெளியே அழைத்து வந்துள்ளனர்.
நித்யாவின் உடலில் காயங்கள் இருந்ததால், முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நித்யா புகாரில், பிரபு, காயத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா