மகளுக்கு தொல்லை தந்த சித்தப்பாவுக்கு 'போக்சோ'
தஞ்சாவூர்: திருவையாறு அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சித்தப்பா, 'போக்சோ'வில் கைதானார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது இளம்பெண். இவரது தாய் இறந்த நிலையில், தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார். எனவே, பாட்டி பராமரிப்பில் இளம்பெண் வளர்கிறார்.
இளம்பெண்ணின் சித்தப்பா முறையான திருவேதி, 37, என்பவர், ஹோட்டல் ஊழியராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மதுபோதையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றார்.
இளம்பெண்ணின் பாட்டி, திருவையாறு மகளிர் போலீசில் அளித்த புகாரில், போக்சோவில் வழக்கு பதிந்து, திருவேதியை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு
-
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா
Advertisement
Advertisement