ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்
ராமநாதபுரம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
ஆடல்வல்லான் நடராஜ பெருமான் அபிஷேக பிரியர். சிவஸ்தலங்களில் தினமும் சிவனின் திருமேனிக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், நடராஜ மூர்த்தியாய் உள்ள பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.
அதில் ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரமும் ஒன்று. இந்த மகா அபிஷேகத்தை ஆனி உத்தரத் திருமஞ்சனம் என அழைப்பர். இது காலை நேரத்தில் நடக்கும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவாக காட்சி தந்து, திருவாசகம் அருளிய பெருமைக்குரிய நாளாகவும் இது கருதப்படுகிறது
நேற்று ராமநாதபுரம், கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்