மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு

சென்னை:மோட்டார் வாகன துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

நம் நாட்டில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனம் தயாரிக்கும் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

தமிழகத்தில், மின்சார வாகன உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மின் வாகன தொழில் பூங்காவை, சிப்காட் நிறுவனம் அமைத்துள்ளது. ஏற்கனவே, ஓசூரில் பல நிறுவனங்களின் வாகன தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

எனவே, ஓசூர் அல்லது சூளகிரியில் இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலையை அமைக்க வலியுறுத்தி, முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனத்துடன், தொழில் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க ஆந்திரா மற்றும் தெலுங்கானாவும் போட்டி போடுகின்றன.

Advertisement