பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை

புதுடில்லி:இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எல்.வி.எம்.3 போன்ற ஏவு கலங்கள் வாயிலாக செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், பி.எஸ்.எல்.வி., இஸ்ரோவின் நம்பகமான ஏவுகலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான விருப்ப விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளதாக, 'இன்-ஸ்பேஸ்' தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியர்களின் பெரும்பான்மை உரிமை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

Tamil News

பி.எஸ்.எல்.வி.,

பி.எஸ்.எல்.வி., என்பது போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் என்பதன் சுருக்கம். இது இஸ்ரோவின் மூன்றாம் தலைமுறை ஏவுகலம். செயற்கைக்கோள்களை தாழ்வான புவி சுற்றுப்பாதை மற்றும் துருவ சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

1994ம் ஆண்டு முதல் வெற்றிகரமான ஏவுதலுக்கு பின், இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி., விண்ணில் செலுத்தியுள்ளது. சந்திரயான்-1 மற்றும் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டத்திலும் இந்த ஏவுகலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஒரே ஏவுதலில் பல செயற்கைக்கோள்களை வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தும் திறன் பி.எஸ்.எல்.வி.,க்கு உள்ளது.

Advertisement