இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே உயர்மட்ட வர்த்தக பேச்சு நேற்று தொடங்கியது.

முன்னதாக, இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயன்றபோது, அமெரிக்கா தற்காலிகமாக 10 சதவீத கூடுதல் வரி விதித்தது. இந்த வரிவிதிப்பு வரும் ஜூலை 24 உடன் முடிவடைவதால், இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்து பேசினார். தற்போதுள்ள புதிய சூழலுக்கு ஏற்ப ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Advertisement