திமுக ஆட்சியில் தொழில் துறையினரிடம் கேட்ட லஞ்சத்தால் ரூ.3.30 லட்சம் கோடி போச்சு!

1

சென்னை: ''கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்கள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்று விட்டன. அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு 3.30 லட்சம் கோடி ரூபாய். இதன் காரணமாக, 2.03 லட்சம் வேலைவாய்ப்புகளை, தமிழக இளைஞர்கள் இழந்துள்ளனர்,'' என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சட்டசபையில் ஒரு குற்றச்சாட்டை கூறிவிட்டு ஓடி விட்டார். அவர் சொன்னது பொய் என தெரிந்து விடுமோ என்று சென்று விட்டார். ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, பல தொழில் முதலீடுகள் சென்று விட்டதாக தொடர்ந்து கூறப்படுகிறது.

ஏழு மாநிலங்கள்



முந்தைய தி.மு.க., ஆ ட்சியில், ஐந்து ஆண்டு களில், 25 முதலீட்டு திட்டங்கள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங் களுக்கு சென்று விட்டன. அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு, 3.30 லட்சம் கோடி ரூபாய். இதன் காரணமாக, 2.03 லட்சம் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் இழந்துள்ளனர்.

இந்த முதலீடுகளால் ஏழு மாநிலங்கள் பயன்அடைந்துள்ளன. கடந்த 2024ல், 'டாடா எலக்ட்ரா னிக்ஸ் செமி கண்டக்டர்' வடிவமைப்பு திட்டம் குஜராத்திற்கு சென்றது. ஜே.எஸ்.டபிள்யூ., குழுமத்தின் மின்சார வாகன பேட்டரி மற்றும் 'ஸ்மெல்டிங்' திட்டம் ஒடிஷாவுக்கு போய் விட்டது.

'சுசூகி மோட்டார்' நிறுவனத்தின் மோட்டார் வாகன திட்டமும், 'மைக்ரான் டெக்னாலஜி'யின் ஏ.டி.எம்.பி., திட்டமும் குஜராத்திற்கு போய் விட்டன. 'டொயோட்டா மோட்டார்' நிறுவனத்தின் திட்டமும் மஹாராஷ்டிராவுக்கு சென்று விட்டது.

கடந்த 2024ல் மட்டும் இவ்வளவு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளதால், முதலீடுகளை தமிழகம் இழந்திருக்கிறது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டுகின்றன. ஆனால், வெறும் 30 நாட்களில் ஆந்திராவுக்கு முதலீடுகளை அனுப்பி விட்டதாக, எதிர்க்கட்சியினர் எங்களை குற்றம் சாட்டுகின்றனர்.

'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தை பொறுத்தவரை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட நீரேற்று மின் திட்டத்திற்கான முதலீடு தமிழகத்திலேயே தொடர்கிறது. 2024ல் பல முதலீட்டு திட்டங்களை இழந்து விட்டனர். கடந்த 40 நாட்களில் எந்த முதலீடும் வெளியேறவில்லை.

தற்போது, 'கேப்ஸ்' நிறுவனத்தின் செயற்கைக்கோள் மையத்தை, தமிழகத்தில் அமைப்பதற்கான வாய்ப்பை பெறுவதில் தமிழகம் வலுவான நிலையில் உள்ளது. இதற்கான பேச்சு, சாதகமான முறையில் தொடர்ந்து நடக்கிறது. எந்த திட்டமும் தமிழகத்தில் இருந்து வெளியேறவில்லை. கடந்த 30 நாட்களில், தென்கொரியா சென்று முதலீட்டை ஈர்த்து வந்திருக்கிறோம்.

போகக்கூடிய நிலையில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, இந்த அரசு ஆதரவு அளிக்கும் என்று கூறி அழைத்து வந்தோம்.

இது தவிர, 'மோதிலேன், யுசாங்' நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியில் வெளிமாநிலங்களுக்கு சென்ற முதலீட்டு திட்டங்களை எல்லாம், எங்கள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கின்றனர்.

அனுமதி



கடந்த ஆட்சியில் அனுமதி அளிப்பதில் தாமதமும், லஞ்ச ஊழலும் தான், முதலீடுகள் வெளியே போனதற்கு காரணங்கள். முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தம்பி முன்னெடுத்து வைத்த ஊழல்களால் தான், இன்று அனைத்து நிறுவனங்களும் வெளி மாநிலங்களுக்கு ஓடுகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி வாங்க வேண்டும் என்றால் கூட, பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதை ஒழிக்கத் தான், 21 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@ 'டெண்டர் மாபியா'

சிவகாசியில் த.வெ.க., சார்பில் நடந்த முதல்வர் விஜய் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் , அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் அரசு அலுவலகத்திற்கு சென்றால், 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் எல்லா வேலையும் நடக்கும். நாங்கள், 'டெண்டர் மாபியா'வை அழித்துள்ளோம். ஆனால், 'ரீல்ஸ் ஆட்சி' என்கின்றனர். முதலீடு குறித்து நான் வெளியிட்ட 'ரீல்சை' கலாய்த்தனர்.

முதலீட்டை ஈர்க்கப் போவதாக, மக்கள் வரி பணத்தில் சொகுசாக நீங்கள் குடும்பமாக பயணம் செய்தீர்களே, அப்போது தெரியவில்லையா? தி.மு.க., ஆட்சியில், 25 நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறியதற்கு காரணம், தொழில் துறை அமைச்சராக இருந்த ராஜாவுக்கு, 'ஆக்டிங்' அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் வேறு யாருமல்ல; அமைச்சரின் தம்பி தான். அந்த தம்பி, ஒவ்வொரு முதலீட்டிற்கும், 'கமிஷன்' கேட்டுக்கொண்டே இருந்ததால், 25 நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு போய்விட்டன. தொழில் நிறுவனங்களிடம் அவர்கள் கேட்ட லஞ்சத்தால், 3.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வாய்ப்பு பறிபோனது. இவ்வாறு அவர் பேசினார்.block_B

Advertisement