ஏற்காட்டில் முதல்வர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஏற்காடு; முதல்வர் விஜயின் பிறந்த நாளான நேற்று, தமி-ழகம் முழுவதும் த.வெ.க.,வினர் கொண்டாடினர். அதை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஏற்காட்டில், போக்குவரத்து துறை அமைச்சரும், சேலம் மத்-திய மாவட்ட செயலாளருமான விஜய் தமிழன் பார்த்திபன் ஆணைப்படி, ஏற்காடு ஒன்றிய செய-லாளர் பிரவீன் தலைமையில், த.வெ.க.,வினர் முதல்வர் விஜயின் பிறந்தநாளை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று, ஏற்காட்டில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும் ஏற்காடு கோவில்மேடு, முருகன் நகர், மஞ்சக்குட்டை, அரங்கம், நாகலுார் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, அட்டை, பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்புக்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை செயலாளர் ஜெயராமன், எட்வின் ராஜ், ஒன்றிய பொருளாளர் கோகுல் மற்றும் மாணவரணி ஒன்றிய பொறுப்-பாளர் நான்சி, குணசேகரன், அமுல், சண்முகம், பாலாஜி, ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் கவுதம், சுமித், சஞ்சய், தகவல் தொழில்நுட்ப அணி நவீன், மவுலிதரன், மகளிர் அணி பொறுப்-பாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு