விம்ஸ் வளாக அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் சர்வதேச யோகா தினம்
சேலம்: சர்வதேச யோகா தினமானது, ஆண்டுதோறும் ஜூனில் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் உடல் மனநல ஆரோக்கியம் குறித்து, மக்களி-டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்-லுாரியின், நாட்டு நல பணித்திட்ட அமைப்பின் மூலம், பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி யோகா நிகழ்வு, கல்லுாரி வளாகத்தில் நடத்தப்பட்டது.கல்லுாரியின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்து, யோகாசனத்தின் முக்கி-யத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக, சேலம் வேம்படிதாளம் துணை மாவட்ட மருத்துவமனையில் சித்த மருத்துவ துறையின், சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் வெற்றிவேந்தன், பல்வேறு யோகாசன முறைகள் குறித்து விளக்கம் அளித்து யோகாசன பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்வில் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பா-டுகளை கல்லுாரியின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஷ்குமார், உடற்பயிற்சி இயக்குனர் சூர்யா மற்றும் பேராசிரி-யர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு