தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

1



நமது நிருபர்




சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 18 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை இன்று காலை முதல் நடந்து வருகிறது.

கடந்த 2017ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிந்துள்ளனர்.



அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரிகள் வீடுகள், நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement