மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா
நமது நிருபர்
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜ தலைவர் ஜார்ஜ் குரியன். இவர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தனது மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகை ஏற்றுக்கொண்டது. பாஜ தொடங்கப்பட்டது முதல் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் ஒருவர். கேரள மாநில அரசியலில் கட்சியின் முக்கியப் பிரமுகராக ஆவார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்
மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில தேர்தல், ராஜ்யசபா தேர்தல் முடிவுகளுக்காக பாஜ தலைமை காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது தேர்தல்கள் முடிந்த நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாகவே, கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா செய்துள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
A routine exercise. Hope the Opposition party members do not play any dirty political game out of his resignation, which they always do.
மாற்றம் ஒன்றே மாறாதது
ஆமாம் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகாவை பாடையில் ஏற்றி பால் ஊத்தாமல் விடமாட்டார் எட்டப்பன்பாடிமேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு