யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு

30


சென்னை: யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை என சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரை: தவெக அரசு தேர்வு செய்த நிரந்தரமாக என் மனதில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நாம் கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டு இருந்தாலும் மக்கள் பணி செய்வது தான் நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரே பணி.

இந்த விஜய் முன்னேற்றத்திற்கு நான் மட்டுமல்ல, தமிழக மக்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். என் உயர்வுக்கு காரணமான கடவுளுக்கு சமமான மக்களுக்கு நன்றி. ரசிகர் மன்றம் துவங்கி மக்கள் பணி செய்து, கடுமையாக உழைத்து இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி உள்ளோம். மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்.


ரியல் கிடையாது




ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்தது மாதிரி சிலர் இமேஜ் கிரியேட் பண்றாங்க. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. எதிர்த்து பேசினால் தான், எதிர்க்கட்சி என சிலர் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் முதல்வர் ஆனேன். அரசியலைப் பேசியதால் என் படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்னைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.


சாமானியர்கள் ஆட்சி




என் உழைப்பு உயர்வுக்கு தமிழக மக்கள் தான் பின்னால் உள்ளனர். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என சொல்வது தான் நமது ஆட்சி. காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தை ஒழித்துள்ளோம். நேர்மையான நிர்வாகம் என்பதில் த.வெ.க. நிர்வாகம் உறுதியாக உள்ளது.

அண்ணாவின் சாமானியர் ஆட்சி போல் விஜய் ஆட்சியில் மிக மிக சாமானியர்கள் ஆட்சியில் உள்ளனர். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டோருக்கு பதிலாக தான் நமது ஆட்சி. 2026 தேர்தலில் யாராலும் உடைக்க முடியாது சொன்ன சாதி, மதத்தை உடைத்துள்ளோம். யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை.


பணம் பறிக்க




எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றனர். ஆமாம் நாங்கள் புதுசுதான் , எங்களுக்கு ஒன்றும் தெரியாதது தான், மக்கள் பணி செய்ய தெரியும், மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது. ஊழல் என்ற பெயரில் பணம் பறிக்க தெரியாததுதான்.

கோவில் பணத்தை கொள்ளை அடிக்க தெரியாததுதான், அரசு வருமானத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மாற்ற தெரியாததுதான், போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாததுதான். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபையில் முதல்வர் விஜய் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement