திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு நிலைப்பாட்டை ஜூன் 22ல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, அதுவரை 'தீபம் ஏற்ற வேண்டும்' என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து இருந்தது.
இந்த அமர்வு முன், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ராம ரவிக்குமார் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகினர்.
பாலசுப்பிரமணியம், வாதிடுகையில், ''தீபம் ஏற்றும் விவகாரத்தில் 100 ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை, பழக்கவழக்கத்தை மாற்றியமைத்து, தற்போது புது நடைமுறையை புகுத்த முடியாது.
தயக்கம் ஏன்?
வரும் கார்த்திகை தீப திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் தன் குழுவின் வாயிலாக தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, இந்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராம ரவிக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
அதுபோல் தமிழக அரசும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரும்,'' என்றார்.
நீதிபதிகள், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தயக்கம் ஏன்? நீதிமன்றம் தவறாக எதையும் கூறவில்லையே. இவ்விவகாரத்தில் இரு தரப்பிலும் சமரச தீர்வு காணாமல் வழக்கை அப்படியே நிலுவையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பினர்.
மூத்த வழக்கறிஞர் மோகன் வாதிடுகையில், ''சமரச தீர்வு காண தயார் என தர்கா, வக்பு வாரியம் தரப்பில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. அதை ராம ரவிக்குமார் தரப்பு நிராகரித்தது. தற்போது தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பர். பின் படிப்படியாக திசை திருப்பி அயோத்தி பிரச்னைபோல் கொண்டு செல்வர்.
இடைக்கால தடை
''ராம ரவிக்குமார் தரப்பில் அவமதிப்பு வழக்கை இங்கு வாபஸ் பெறாமல், இரட்டை நிலைப்பாடு எடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்,'' என்றார்.
அருண் சுவாமிநாதன் வாதிடுகையில், ''நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்கா தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முந்தைய தி.மு.க., அரசு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி முதலில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்.
''இந்நீதிமன்றத்தின் தலைமையில் சமரச தீர்விற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், எங்கள் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க தயார்.
''அடுத்த தேர்தல் வரை வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்ற உள்நோக்கில், தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது,'' என, வாதிட்டார்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு ஏற்கனவே விதித்த இடைக்கால தடை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது. விசாரணை ஜூலை 27க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.
முந்தைய மாடல் அரசுக்கும் இப்போதய அரசுக்கும் வித்தியாசமில்லைமேலும்
-
மனைவியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை; கணவர், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு
-
துாத்துக்குடி யில் திடீர் சூறைக் காற்று: 100 வீடுகள் சேதம் அரிதான நிகழ்வு என வானிலை மையம் விளக்கம்
-
மாணவர்களின்றி 7.. ஒரே மாணவருடன் 4; மூடும் நிலையில் தேனி அரசு பள்ளிகள்
-
மகளுக்கு தொல்லை தந்த சித்தப்பாவுக்கு 'போக்சோ'
-
ரேஷனில் தே.எண்ணெய் வழங்கக்கோரி போராட்டம்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை