உ.பி.,க்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை 166 கோடி மாநில அரசு பெருமிதம்

பெரோசாபாத்: உத்தர பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, 2017ல், ஆண்டுக்கு 23 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை, 166 கோடியாக அதிகரித்துள்ளதாக மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஜெயவீர் சிங் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் பெரோசாபாதில், 658 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயவீர் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுற்றுலாத் துறையில், உ.பி., பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. 2017ல் ஆண்டுக்கு 23 கோடி சுற்றுலாப் பயணியர் வருகை தந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை அந்த எண்ணிக்கை, 166 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகம் முழுதும் உ.பி.,க்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

கலாசார, ஆன்மிக மற்றும் பாரம்பரியத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு பணியாற்றி வருகிறது. இது உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணியரை ஈர்க்க உதவியுள்ளது.

எங்கள் மாநிலம், சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறி வருவதற்கு, இங்குள்ள விரைவு சாலைகள் மற்றும் விமான நிலையங்களின் வலுவான கட்டமைப்புதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement