கனவு நிறைவேறியது; சாதனை வீரர் சூர்யவன்ஷி பெருமிதம்
புதுடில்லி: இந்திய டி20 அணியில் இடம் பிடித்தது, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம், அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை என இளம் வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
பீரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்து அசத்திய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜூன் 26ல் தொடங்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இத்தகைய இளம் வயதில், இந்திய அணியில் இடம் பெற்ற அவரது சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தான் தேசிய அணியில் சேர்க்கப்பட்டது பற்றி வீடியோவில் பேட்டி அளித்த சூர்யவன்ஷி கூறியதாவது: அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் 'பேட்' எடுத்துக் கொண்டு பயிற்சிக்காக கிரிக்கெட் மைதானம் சென்ற முதல் நாளில் இருந்து கண்ட கனவுகள் நிறைவேறியுள்ளன.
இந்திய டி20 அணியில் இடம் பிடித்தது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத மிகப்பெரிய விஷயம், அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
உலக சாதனை
இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கான் ஏ இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை படைத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
அதிரடியாக விளையாடிய வைபவ், 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 11 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். இதன் மூலம் சர்வதேச அளவில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கு சூர்யவன்ஷி தான் ராஜா. அந்நேரம் அவர் எவ்வளவு சாதனைகள் படைத்திருப்பார் என்று நினைக்கையில் பிரமிப்பாக உள்ளது.
வாழ்த்துகள்
இந்தச் சிறுவனின். அதிவேக. பவுண்டரி, சிக்ஸர்களை. பார்க்கும்போது, கண்ணே. பட்டுவிடுமோ. என்று. அச்சமாக. இருக்கிறது
அசத்து ராஜா. பீஹாரிகளை பீடா வாயன் என்றும் பானி பூரி விற்பவன் என்றும் விமர்சித்த டாஸ்மாக் அரசியல்வாதிகள் மூஞ்சியில் கரியை பூசு. இந்தியாவே உன் பின்னால்.
ஷோகிப் அக்தரின் பாராட்டையும் பெற்றுள்ளார்..
சச்சின், கோலி வரிசையில்.. என்று..
வாழ்த்துக்கள்.