இனி டிவியில் இன்ஸ்டா ரீல்ஸ்; புதிய வசதி அறிமுகம்

2



நமது நிருபர்




இன்ஸ்டா செயலியை டிவிகளில் பயன்படுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, முதல்கட்டமாக 2020ம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்த சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாகும். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி, உலகம் முழுவதும் ஏராளமானோர் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகின்றனர்,

நண்பர்களுக்குத் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பலாம். தற்போது ஸ்மார்ட் டிவிகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்க்கவும், ஷேர் செய்யவும் மெட்டா நிறுவனம் 'Instagram for TV' என்ற பிரத்யேக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிவியின் ஆப் ஸ்டோரில் சென்று Instagram என தேடி இன்ஸ்டால் செய்யவும்.

ஆப்-ஐ ஓபன் ஆனதும் திரையில் தோன்றும் QR குறியீட்டை உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து உள்நுழையலாம். இந்த புதிய வசதி முதல்கட்டமாக 2020ம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்த சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement